யார் இந்த இளைஞன்? “தமிழை இப்படித் தலைப்பிலேயே கொலை செய்திருக்கின்றான்” என்று தமிழார்வலர்கள் எண்ணலாம். இதோ அதற்கான விளக்கம்: என்னுடைய பெயர் சுப்ரமணி. இன்றைய கணிணி உலகில் அனைவரும் எதை எதையோத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர், அதற்காக பலவற்றை அவர்கள் இழந்திருப்பதை அறியாமல். இதில் மிகவும் முக்கியமானதொரு இழப்பு “மனித நேயம்”.
இப்போது சிறுவர்களிடம் கேட்டால், “நான் மருத்துவராக விரும்புகிறேன் அல்ல்து …” என்று கூறுவார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து சிறுவர்களிடம், நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால், அவர்கள் “நான் மனிதனாக விரும்புகிறேன்” என்று கூறுமளவுக்கு மனிதர்கள் இப்போது இயந்திர மனிதர்களாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதற்கு விதி விலக்கு அல்ல. இப்போதிலிருந்தே நான் மனிதனாக மாற விரும்புகிறேன்… மனிதனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன், விரைவில் இந்த தலைப்பும், நானும் “மனிதன்” ஆக மாறுவோம்.
முதலில் எழுத்துப் பிழை என்று நினைத்திருந்த நீங்கள் இப்போது இதை கருத்துப் பிழையாக கருதலாம். இப்போது சொல்லுங்கள் இதில் ஏதேனும் பிழை உள்ளதா?