Friday, September 08, 2006

குருடர்களின் யானை

குருடர்கள் யானையை அறிவார்களா?
அறிவார்கள்...
குருடர்கள் அறிவதைப் போல

உண்மை என்பது யானை
தத்துவங்கள் எல்லாம் குருடர்கள்

யானை உரல் போன்றது என்றவன் பொய் சொல்லவில்லை
அவனுக்கு அகப்பட்டது யானையின் கால்
உரல் போன்ற ஒன்று யானையில் உண்டு

யானை உலக்கை போன்றது என்றவனும் பொய் சொல்லவில்லை
அவனுக்கு அகப்பட்டது யானையின் துதிக்கை
உலக்கை போன்ற ஒன்று யானையில் உண்டு

யானை முறம் போன்றது என்ட்றவனும் பொய் சொல்லவில்லை
அவனுக்கு அகப்பட்டது யானையின் காது
முறம் போன்ற ஒன்று யானையில் உண்டு

யானை துடைப்பம் போன்றது என்றவனும் பொய் சொல்லவில்லை
அவனுக்கு அகப்பட்டது யானையின் வால்
துடைப்பம் போன்ற ஒன்று யானையில் உண்டு

ஒவ்வொரு குருடனுக்கும் ஏதாவது ஒன்று அகப்படுகிறது
நிற்கும் இடத்தை பொறுத்து...
அகப்படுவது கைகளுக்குத்தான்...கண்களுக்கு அல்ல
ஏனெனில் அவர்கள் காண முடியாதவர்கள்

அவர்கள் அறிந்ததை கொண்டு அறியாததை சொல்லுகிறார்கள்
அவர்களால் அப்படித்தான் சொல்ல முடியும்
அந்த அறியாதது அறிந்ததை போன்றதுதான்
ஆனால் அறிந்ததே அல்ல!!!

அவர்கள் பொய் சொல்லவில்லை
யாரும் பொய் சொல்ல முடியாது
ஏனெனில்.... இல்லாததை எவரும் சொல்ல முடியாது

பொய்யிலும் உண்டு உண்மை
ஒவ்வரு குருடனும் யானையின் ஒரு பகுதியையே அறிகிறான்
குருடர்களால் முழுமையை அறிய முடியாது

நான்கு பேர் சொல்லிலும் உண்டு உண்மை
ஆனால் நான்கிலும் இல்லை முழு உண்மை
அதனால் தான் நடக்கிறது சர்ச்சை

'உண்டு' என்பவனும் உண்மையே சொல்கிறான்
'இல்லை' என்பவனும் உண்மையே சொல்கிறான்
இரண்டும் முரணானவை அல்ல
இரண்டும் உண்மையின் வெவ்வேறு தரிசனங்களே

முன் பக்கம் நிற்பவன் முகத்தை பார்க்கிறான்
பின் பக்கம் நிற்பவன் முதுகை பார்க்கிறான்
தெரிவது மட்டுமல்ல உண்மை
பார்வைக்கு அப்பாலும் இருக்கிறது உண்மை

'உண்டு'ம் 'இல்லை'யும் சேர்ந்ததே முழு உண்மை
எல்லாப்பக்கமும் நின்று பார்ப்பவனே
உண்மையை முழுமையாக தரிசிக்கிரான்

யானையிடம் உரல் போன்றதும் உண்டு என்றால் பிரச்சனை இல்லை'
யானை என்பது உரலே உலக்கை அல்ல 'என்றான் ஒருவன் ...பிரச்சனை பிற்ந்தது
உரலும் உலக்கையும் மோதிக்கொண்டன

இன்னொருவன் வந்தான்'யானை நெல் குத்துவதற்கே' என்றான்
இன்னொருவன் வந்தான்அவன் உரலையே யானை என்றான்

தொடங்கியது இருளின் சகாப்தம்இது தான் மூட மதங்களின் கதை...

------------------------------------------- கவிக்கோ அப்துல் ரகுமான்

No comments: