Wednesday, April 16, 2008

போர் போதும் தோழா

I've heard this song which i downloaded from somewhere. Sung by dippu against war... Wonderful lyrics and composition couldn't help but writing lyrics... and it goes like this...

பூ வாசல் திறந்தால் வாசம் மயக்கும் வாழ்கை இனிக்கும்,
போர் வாசல் திறந்தால் வாழ்கை எரிக்கும் ஜீவன் மரிக்கும்
இதயமெல்லாம் இணைந்திடும் நாளெல்லாம்
எழும் பகைமை வீழாதோ ??

அதிசயமாய் அகிலமும் மாறியே
அமைதியிலே வாழாதோ ??
ஓ மனித இனமே , மடியும் இனமே ,
மயக்கம் தெளிவாய் !!

போர், உலகில் வெறியும் எரியும் வரையில்,
தினமும் எரிவாய்.
ஒரு ஜீவன் உயிர் வாழ நீ பாதை காட்டினாய் - முழு
உலகம் உயிர் வாழ வகை செய்தோங்கியே..

இது உனக்கு இது எனக்கு என பிரிக்கும் உலகம்
ஒன்றானால் நன்றாகும் நம் துன்பம் நீக்கிடும்
ஒரு நாட்டை ஒரு நாடு களவாடும் பிழை தான்
இதனாலே மண்மேலே எழும் கண்ணீர் அலை தான்

எது புனிதம் எது புனிதம் என தேடும் மானிடா
இவ்வுலகில் மனிதரைப்போல் ஒரு புனிதம் ஏதடா
இணையங்களால் இணைந்திடும் மாநிடா
இதயங்களால் இனைவாயோ

எரிந்திடுதே அனுதினம் உலகமே
அன்பினில் நீ நனைவாயா
போர் போதும் தோழா
மனிதம் வாழ வைப்போம்

ஓர் தாயின் மக்கள்
ஒன்று சேர்ந்து நிற்போம்...
ஒன்றாவோம் ...

No comments: